Skip to main content

Posts

Showing posts from August, 2007
I used to believe ... I wanted to shout I wanted to cry But I buried my sorrows In the depths of my soul Couldn’t stop - a tear or two Didn’t let - the sighs to flow I bear the pains - in my heart Hiding the wound - that still bled No one to heal - no one to care Wanted to talk But no one was to listen Loneliness did griped - my mind Confusion was – hard to define I still do - remember that time I used to believe – in life . . . Credits: 4minutesperday.com
உன்னை நிறைத்த அறை உன்னை நிறைத்த உனதறையில் நீயில்லாதபோது நுழைந்தேன் உறங்க நீ பட்ட பிரயத்தனங்கள் படுக்கையில் கசங்கிக் கிடந்தன சுவர் மூலையில் உறுப்பின் அசௌரியங்கள் சுருண்ட உன் உள்ளாடைகள் கிடந்தன அலம்பாத தேநீர் குப்பியில் ஒட்டியிருந்தது உன் எச்சிலின் இனிப்பு விரித்துக் கிடத்திய புத்தகத்திலிருந்து கவிதையின் நெகிழ்ச்சி அறையெங்கும் சுழன்றது உன்னோடு வாய்க்காத பொழுதை உன் வாழ்முறை இறைந்த அறையில் உன் ஒழுங்கீனங்களோடு கழித்தேன். Credits : மா.சு. சரவணன் Thanks: text : Kalachuvadu http://www.kalachuvadu.com Photos : allposters.com
நீ என்றான பிறகு காரணங்களிலிருந்து விலகியே நிற்கிறாய் அற்ப வாதங்களின் அருகில் செல்ல நேர்கையில் திசைகள் பிரிகின்றன. நெருக்கமான கணங்களில் திணறுகிறது நீ அழுத்தும் அன்பு. பிரிவது இன்னும் தடித்த தூரத்தில் என்பதற்காகவாவது நாம் பிரிய முயற்சிக்கலாம். ஆனபின்னும் மீதூர்ந்த காற்றின் சுவை தேடி மருகுகிறது தேகம் கம்பக்கட்டு வானத்தில்தெறித்துப் போவது நீ சுழற்றிய நான் Credits: அய்யப்பன் Thanks: Kalachuvadu. http://www.kalachuvadu.com
மரம் மீண்டும் உதிர்க்கிறது மற்றுமோர் இலையை... இந்த முறை . . . ஆற்றில் விழுந்த இலை மரத்தை விட்டு வெகுதூரம் வந்தாயிற்று. அடுத்து அருவி என்பது இலைக்குத் தெரியாது. அது இலை என்பது ஆற்றுக்கும் தெரியாது. இலைமீது தும்பியொன்று பயணிக்கிறது. அது பயணமன்று. எங்கிருந்தும் யாரும் எங்கேயும் போய்விட முடியாது என்பதாய் ஓர் அமர்வு . . . வெறுமனே. ஆறு தும்பி அருவி இலை யாருக்கும் தெரியாது யார் யாரென்பது. அண்டத்தின் தீராத பேரிருட்டில் ஓய்ந்து மிதக்கிறது இலை. விருட்டெனப் பறக்கிறது தும்பி. மரம் மீண்டும் உதிர்க்கிறது மற்றுமோர் இலையை. அது இந்த முறை காற்றில் அலைகிறது. Credits: அழகுநிலா Kalachuvadu.com http://www.kalachuvadu.com
எனது நிழல்களுக்கு நீ அஞ்சவேண்டியதுமில்லை என்னை நீ புரிந்துகொள்வதில் புதிர்களோ குழப்பங்களோ இல்லை எனது நிழல்களுக்கு நீ அஞ்சவேண்டியதுமில்லை நீ திறக்க முடியாத எனது பெட்டிகளில் சாவித் துவாரங்களில் துருப்பிடித்த ஆணிகளைச் சொருகத் தேவையே இல்லை நான் கைமறதியாய் விட்டுச் செல்லும் தடயங்களில் என்னைபற்றி உனக்கு எதுவுமே கிடைக்கப் போவதில்லை சும்மா ஒரு சுவாரசியத்திற்காக கண்ணாடியில் என் பிம்பங்களை கொஞ்சம் சிக்கலாக்கிக் கொண்டிருக்கிறேன் அவ்வளவே Credits : மனுஷ்ய புத்திரன் uyirmmai@gmail.com http://uyirmmai.blogspot.com/2006/03/blog-post.html