எனது நிழல்களுக்கு நீ அஞ்சவேண்டியதுமில்லை
என்னை நீ
புரிந்துகொள்வதில்
புதிர்களோ
குழப்பங்களோ
இல்லை
எனது நிழல்களுக்கு
நீ அஞ்சவேண்டியதுமில்லை
நீ திறக்க முடியாத
எனது பெட்டிகளில் சாவித் துவாரங்களில்
துருப்பிடித்த ஆணிகளைச் சொருகத் தேவையே இல்லை
நான் கைமறதியாய் விட்டுச் செல்லும் தடயங்களில்
என்னைபற்றி உனக்கு எதுவுமே கிடைக்கப் போவதில்லை
சும்மா
ஒரு சுவாரசியத்திற்காக
கண்ணாடியில் என் பிம்பங்களை
கொஞ்சம் சிக்கலாக்கிக் கொண்டிருக்கிறேன்
அவ்வளவே
Credits : மனுஷ்ய புத்திரன்
uyirmmai@gmail.com
http://uyirmmai.blogspot.com/2006/03/blog-post.html

Comments