Skip to main content
நீ என்றான பிறகு

காரணங்களிலிருந்து விலகியே நிற்கிறாய்
அற்ப வாதங்களின் அருகில்
செல்ல நேர்கையில் திசைகள் பிரிகின்றன.

நெருக்கமான கணங்களில்
திணறுகிறது
நீ அழுத்தும் அன்பு.

பிரிவது இன்னும் தடித்த தூரத்தில்
என்பதற்காகவாவது நாம்
பிரிய முயற்சிக்கலாம்.

ஆனபின்னும்
மீதூர்ந்த காற்றின் சுவை தேடி
மருகுகிறது தேகம்

கம்பக்கட்டு வானத்தில்தெறித்துப் போவது
நீ சுழற்றிய நான்

Credits: அய்யப்பன்
Thanks: Kalachuvadu. http://www.kalachuvadu.com

Comments